தமிழர்களுக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சையும், முதலமைச்சர் பதவியையும் வழங்கியவர் மகிந்த ராஜபக்சவே !



கிழக்கு மாகாண தமிழர்களுக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியையும், கிழக்கு முதலமைச்சர் பதவியையும் வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே  அவர்களே என மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் மகளீர் அணி மற்றும் இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாண தமிழர்களை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றியே வருகிறது கிழக்கு தமிழர்களை அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்க்கின்றனர். ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு தருவதாக கூறி கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் காலத்தை இழுத்தடித்ததே தவிர தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிறைய செய்துள்ளது. ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும் கை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்க அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நிறைய செய்துள்ளார். ஆனால் தமிழ் மக்களுக்கு ஜக்கிய தேசியக் கட்சி எதனையும் செய்யவில்லை.
குறிப்பாக கிழக்கு தமிழர்களை ஜக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஏமாற்றியே வருகிறது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஒன்றை உருவாக்க மறுத்துவிட்டது காரணம் முஸ்லிம் அமைச்சர்கள் கோபித்து விடுவார்கள் என்ற பயம் ஆனால் முன்னாள் ஜனாதிபதியும் பொது ஜன பெரமுன கட்சியின் தலைவருமான எங்களது மகிந்த ராஜபக்ச ஐயா அவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் கிழக்கிற்கு தமிழ் முதலமைச்சர் ஒருவரை தற்துணிவுடன் நியமித்தார் அதே போன்று கடைசியாக உருவாகிய இடைக்கால அரசில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றை உருவாக்கி அதனை பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுக்கு வழங்கியிருந்தார். இவ்வாறு கிழக்கு தமிழ் மக்களுக்கு துணிந்து ஆட்சி அதிகாரத்தை வழங்க கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச   தலைமையிலான ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களே எனவே கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வது போன்று யுத்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் போன்று இனி ஒருபோதும் நடைபெறாது. பழைய கதைகளை கூறிக் கூறியே தமிழ் மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்தது அதனால் கட்சி இலாபம் அடைந்ததே தவிர தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை இம்முறையும் பழைய கதைகளை கூறி உணர்ச்சி அரசியலை செய்யவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறது. அதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்க கூடாது. குறிப்பாக கிழக்கு தமிழ் மக்கள் பாதுகாக்க படவேண்டும் என்றால் தமிழ் மக்கள் பொது ஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.