நாளை மோதும் மட்டு.இந்துவும் பெரியகல்லாறு மத்தியும்


மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் சிகரத்தினை நோக்கி கிரிக்கட் போட்டி நாளை காலை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

நாளை காலை பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி சிறப்பான முறையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்த சிகரத்தினை நோக்கி கிரிக்கட் போட்டியானது மட்டக்களப்பின் கிரிக்கட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

கோலாகலமான முறையில் பெரியகல்லாறு பொது விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த கிரிக்கட் போட்டியை கண்டுகளிக்க கிரிக்கட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.