யானையின் தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் உறுகாமம் மக்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானையினால் 03 வீடுகள் , சில்லரை வியாபாரக்கடை என்பன சேதமாக்கப்பட்டுள்ளது.

நோற்றிரவு சுமார் 8.00 மணியளவில் மக்கள் வாழும் குடியிருப்பு பிரதேசங்களில் உட்புகுந்து இக்கட்டுயானை இவ்வாறு சேத்ப்படுத்தியுள்ளது.
சில்லரை வியாபாரக்கடையைச் சேதப்படுத்திய யானை மூன்று வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவற்றையும் உடைந்து உள்னுளைய முயற்சித்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

தாம் வாழும் பகுதியில் யானை வேலை காணப்பட்டாலும் அதற்கு இதுவரை மின்சாரம் வழங்கவில்லையைனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமது பிரச்சினை தெடர்பில் அரசஅதிகாரிகளோ அரசியல்வாதிகளோ பாராபட்சமாகவுள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.