ஐ.தே.கட்சியுடன் கடந்த நான்கு வருடத்தில்; பேசிபேசி எதனையும் தமிழ் மக்களுக்கு தமிழ் தலைமைகள் பெற்றுக்கொடுக்கவில்லை.கோத்தபாய ராஜபக்ஸவுடன் தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தையினை நடாத்தி தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க புத்திசாதுரியமாக செயற்படவேண்டும் என பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துவருகின்றது.இதுவரையில் மட்டக்களப்பில் 13 கட்சிகளும் ஐந்து பொது அமைப்புகளும் பொதுஜனபெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்டில் இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் 231 தொகுதிகளை பொதுஜனபெரமுன கைப்பற்றியுள்ளது.42தொகுதிகளை மட்டுமே ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.முஸ்லிம் காங்கிரஸ்,மலையக கட்சிகள் இணைந்தே இந்த 42 தொகுதிகளையும் கைப்பற்றமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் இரண்டு தொகுதிகளை கைப்பற்றமுடிந்தது.ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியினால் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றமுடியாத நிலையேற்பட்டது.ஐக்கிய தேசிய கட்சிக்கு மட்டக்களப்பில் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையே இருக்கின்றது.இறுதியாக நடாந்த எல்பிட்டிய தேர்தலிலும் பொதுஜனபெரமுனவே வெற்றிபெற்றுள்ளது.சிங்கள் மக்கள் பொதுஜன பெரமுனவின் பின்னால் அணி திரண்டுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர்.
யுhழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் ஒன்று கூடி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் சந்தித்து பேரம்பேசி தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெறுவது என தீர்மானித்துள்ளனர்.ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியுடன் பேரம் பேசி எந்த நன்மையினையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.தமிழ் மக்களுடன் பேசப்போவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அறிவிருக்கின்றார்.அவருடன் இந்த தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடாத்தி புத்திசாலித்தனமாக தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை இனிமேலாவது கையாளவேண்டும்.
ருணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை தமிழ் தலைமைகள் நம்பிநம்பி தொடர்ந்து ஏமாந்த வரலாறே உள்ளது.இம்முறை தமிழ் மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தமிழ் மக்களுக்கு தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு.
விடுதலைப்போராட்டமாக இருக்கலாம்,தீர்வுத்திட்டங்களாக இருக்கலாம் காலம்காலமாக இழுத்தடிப்புகளை செய்து தமிழ் மக்களை ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றியே வருகின்றது.ஆகவே கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை தமிழ் கட்சிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.