மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடக்கும் அற்புதம்

இறுதி நாளன்று மண்டூர் கந்தசுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தங்கவேல் கொண்டுள்ள பேழை ஊர்வர்வலமாக மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பண்டைய தீர்த்தக்கேணிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பூஜையினை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ வேல் கொண்டுசெல்லப்பட்டு தீர்த்தோற்சவம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து முருகப்பெருமானை தாங்கிய பேழை கந்தசுவாமி ஆலயத்தில் உள்ள தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அங்கு சிறுமிகள் ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது ஆரத்தியெடுத்த சிறுமிகள் மயங்கிவிழும் காட்சி பல்லாண்டுகாலமாக நடைபெற்றுவருகின்றது.

மயங்கிவிழும் சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு கொண்டுசென்று மயக்கம் தெளியவைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.