எவகிறின் சம்பியன் கிண்ணம் கோல்டன் ஈகில் வசம்.

மட்டக்களப்பு எவகிறீன் விளையாட்டுக்கழகம் தனது 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிக்கு 9 பேர் கொண்ட மென் பந்து கிறிக்கட் சுற்றுத்தொடர் ஒன்றினை   கடந்த வாரம் முதல் நடத்தியிருந்தது.
எவகிறீன் மைதானத்தில் நடைபெற்ற சுற்றுத்தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த  45 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின,   நேற்று ஞாயிற்றுக்கிழமை  (22.09.2019) இடம் பெற்ற இறுதி போட்டியில் மட்டக்களப்பு கருவப்பங்கேணி கோல்டன் ஈகிள் மற்றும்  சென் அன்ரனிஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோல்டன் ஈகில்  விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும் சென் அன்ரனிஸ் இரண்டாம் இடத்தையும் எவகிறின் விளையாட்டுக்கழகம் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.