உன்னிச்சை குளத்திலிருந்து விநியோகிக்கப்படும் நீர் அருந்துவதற்கு உகந்ததா?
மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு உன்னிச்சை குளத்திலிருந்து பெறப்படும் நீரே சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
அந்தவகையில்
தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் பொதுமக்களுக்கு குழாய் மூலம் வினியோகிக்கப்படும் நீரின் நிறம் மாற்றம் அடைந்துள்ளதுடன் , கொதிக்க வைத்தால் கூட அதன் படிமங்கள் மாறவில்லை எனவும் இந்த குடி நீரை அருந்தலாமா எனவும் அச்சத்துடன் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இதேவேளை குடிநீர் விநியோகிக்கும் உன்னிச்சை குளத்தில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.


