(சசி துறையூர்)
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (01.08) நண்பகல் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று தாந்தோன்றி ஈசனின் பாதங்களில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்ட பேனைகள் மாணவர்களுக்கு வழங்கி ஆசி வழங்கப்பட்டன.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ ம.சச்சிதானந்தன் குருக்கள் அவர்களினால் பூசை ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன , அத்தோடு மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர், மற்றும் ஆலய அறங்காவல் சபையினரும் இவ் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்தபூசை வழிபாட்டில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற இந்தபூசை வழிபாட்டில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.










