பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில்

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உயகுமார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன் உட்ப பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் சகல பகுதிகளையும் சேர்ந்த பட்டதாரிகள் இந்நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குமாறு போராட்டம் நடாத்திய பல பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.