மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகள் நிலவுவதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் சில அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதிகளான கொடுவாமடு,வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
கொடுவாமடு,வேப்பவெட்டுவான் ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இந்த குடிநீர் விநியோகம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களுக்கும் பிரதேசசபைகளினால் குடிநீர் விநியோகம் செய்யமுடியாத நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகத்தின் புதல்வர்களான விஜி மற்றும் சுஜி ஆகியோரின் உதவியுடன் இந்த குடிநீர் விநியோகம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மகளிர் மாவட்ட சம்மேளன தலைவியுமான செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தாங்கள் தினமும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கு நீண்டதூரம் பயணம் செய்து ஆறுகளில் குடிநீரைப்பெற்றுக்கொள்வதாகவும் ஆனால் சுவிஸ் உதயம் மேற்கொண்ட உதவி காரணமாக குடிநீர் பிரச்சினையை ஓரளவு குறைக்கமுடியும் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.