2004ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம் தெரிவித்தார்.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்று இன்று மாலை வந்தாறுமூலையில் முன்னெடுக்கப்பட்டது.
மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றான மதுராபுரி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிராம மட்ட சமூக அபிவிருத்தி செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சிரமதான நிகழ்வினை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம் , சுவிஸ் உதயம் அமைப்பின் இணைப்பாளர்களில் ஒருவரான அக்கரை பாக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் சுதர்சன்,செயலாளர் அ.ராஜன் ஆகியோரின் அனுமதியுடன் இந்த நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துவருவதாகவும் இதன்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் கல்வியில் பின்தங்கிய பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதியில் முடிந்தளவு கல்வி முன்னேற்றத்திற்கு பங்களிப்புகளை வழங்கிவருவதாக தெரிவித்தார்.