71 வருட பழமை வாய்ந்த அம்மனுக்கு சடங்கு உற்சவம்.





(சசி துறையூர் )
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பம்.


மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் பன்னெடும்கால  வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ பத்திரகாளி அம்மனின் 71ம் ஆண்டு வருடாந்த சடங்கு உற்சவம் 03.08.2019 சனிக்கிழமை நரசிங்கர் சடங்குடன் ஆரம்பமாகி புதன் கிழமை (07.08) கன்னிக்கால் வெட்டுதலும் , வியாழக்கிழமை (08.09) மடைப்பெட்டி சடங்கும் , வீதி ஊர்வலமும் இடம் பெற்று வெள்ளிக்கிழமை (26.07) அதிகாலை 5.00 மணிக்கு  தீமிதித்தல் சடங்கை தொடர்ந்து பள்ளைய சடங்கும் அதை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்று இவ்வருட சடங்கு உற்சவம் நிறைவுபெறவுள்ளது.