இலங்கை கபடி சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பினை சேர்ந்தர் தெரிவு –குவியும் வாழ்த்துகள்

இலங்கை கபடி சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பினை சேர்ந்த ஆர்.கே.சஹீ தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற தேர்வில் பலத்த போட்டியின் மத்தியில் இலங்கை கபடி சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கம் உட்பட பல்வேறு விளையாட்டுத்துறை ஊடாக மாகாண,மாவட்ட,தேசிய,சர்வதேச போட்டிகளில் இலங்கைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வீரராக இருந்த இவர் இன்று இலங்கை கபடி சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.