மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் குருத்துவநிலையில் 50ஆண்டுகள் நிறைவுசெய்த அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார், குருத்துவநிலையில் 25ஆண்டுகள் நிறைவுசெய்த அருட்தந்தை நவோஜி நவரெட்னராஜா ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
பொன்விழா மற்றும் வெள்ளிவிழாவாக இந்த கௌரவிப்பு நிகழ்வுகள் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை லோரன் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் சமூக பணி,உளவளப்பணி,ஆன்மிகப்பணியென பல்வேறு பணிகளை அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் ஆற்றிவரும் அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் சமூக சேவையாளராகவும் ஆன்மிக ரீதியான பணியையும் அருட்தந்தை நவோஜி நவரெட்னராஜா ஆற்றிவருகின்றார்.
இவர்களை கௌரவிக்கும் வகையில் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்றுவரும் வேளையில் இன்று மாலை விசேட திருப்பலி பூஜையும் நடாத்தப்பட்டது.
இந்த விசேட திருப்பலி பூஜையும் கௌரவிப்பு நிகழ்வும் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்கு மக்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.
இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து மக்களுக்கு ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பங்குமக்களினால் இருவரும் பொன்னாடை போர்த்தி கவிப்பா வழங்க கௌரவிக்கப்பட்டதுடன் பொன்விழா மற்றும் வெள்ளிவிழாவாக நிறைவு கேக் வெட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.