மாணவர்களுக்கு ஆசி வேண்டி கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை.




(சசி துறையூர்) 
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 01.08.2019ம்  திகதி நண்பகல்  இம்முறை கல்விப் பொதுத்தராதர  உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை ஆராதனைகள் இடம்பெறவுள்ளது.


மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தபூசை வழிபாட்டில் கொக்கட்டிச்சோலை தாந்தோன்றிஸ்வரர் பெருமானின் திருப்பாதங்களில் பூசிக்கப்பட்ட பேனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதால் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆசி பெற அழைக்கின்றனர்.


(கடந்த வருடத்தில் இடம்பெற்ற பூசை நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு)