(சசி துறையூர் )
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய 48 நாள் கும்பாபிஷேக இறுதி நாளான இன்று (29.07) சங்காபிசேகத்தை முன்னிட்டு ஏறாவூர் அரசையடி பிள்ளையர் ஆலயத்தில் இருந்து பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை நோக்கி பெருந்திரளான பக்தர்கள் அம்மனுக்கு பாற்குடம் ஏந்தி தமது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பாற்குட பவனியைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூசை ஆராதனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா கடந்த 08.06.2019 சனிக்கிழமை ஆரம்பமாகி
அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாத்தும்
நிகழ்வுகள் 10,11.06.2019 திகதிகளில் நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் 12.06.2019 திகதியும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது .
அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாத்தும்
நிகழ்வுகள் 10,11.06.2019 திகதிகளில் நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் 12.06.2019 திகதியும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது .









