மட்டு அரச அதிபர் போதைப்பொருள் பாவனையை தடுக்க தவறிவிட்டாரா.?







மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரச அதிபர் போதையை தடுக்க தவறிவிட்டார் என சமூகவலைத்தள மொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=421559011774784&id=100017620662385

அந்த பதிவு.

திரு மா.உதயகுமார் மாவட்டச் செயலாளர் ஐயா அறிக்கைளும் மேடை பேச்சுக்களும் சிறந்தது அல்ல என்பதை விட தங்களுக்கு என்று ஒரு அதிகாரமான பதவி அதற்கான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முறையாக செயற்படுத்தும் அதிகாரமும் கண்காணிப்பும் ஒருங்கே உங்கள் கைவசமே உள்ளபோது நீங்கள் கூறிவரும் கருத்துக்களை ஊடக வாயிலாக பார்க்கும் போது பல கேள்விகள் எழுகின்றது.


 ஐயா....
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை என்ற அரக்கனை ஒழிக்கத்தான் வேனும் அதற்காக அனைத்து அரசாங்க அதிகாரிகளும் இணையத்தான் வேனும் என்பது சரிதான் ஐயா
இருந்தும் தாங்கள் கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி ஆணையாளர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தற்போது மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளை அலங்கரித்தவர்,


குறித்த அதிகாரமான பதவிகளில் இருந்து கொண்டு இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டதுக்கு  மேலதிகமாக 60 மேற்பட்ட சாராய தவறணைகளுக்கான அனுமதிகள் இருப்பதாக பல அரசியல் வாதிகள் அபிவிருத்தி குழு கூட்டம் போன்ற வற்றில் ஆக்குரோசமாக கருத்துக்கள் தீர்மானங்களை நிறைவேற்றிய போதும் அது சம்பந்தமாக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன ஐயா?


அதை விடுவம் சமுர்த்தி திட்டத்தில் போதை ஒழிப்பு வாரம் என்று சாதாரனமாக 20 ரூபாய்க்கும் பெறுமதி இல்லாத கொடி விற்பனை மூலமாக நான்கு வருடங்களில் ஏழை மக்களிடம் இருந்து சுமார் ரூபா 58 மில்லியன் ரூபாய் பணமாக சேர்த்து உள்ளார்கள்.


இந்த 58 மில்லியன் பணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் இருந்து இதுவரை எத்தனை போதைக்கு அடிமையான குடும்பம்,  நபர்களை மீட்டு எடுத்துள்ளீர்கள் என்ற ஒரு ஆவணத்தை காட்ட முடியுமா ஐயா....


சாதாரனமாக ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பத்தை தெரிவு செய்து 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு 140 குடுபத்தையாவது இதுவரை போதை எனும் அரக்கனின் பிடியிலிருந்து மீட்டு முன்னேற்றி ஏதாவது ஒரு ஆவண ரீதியான ஆதாரத்தை உங்கள் ஊடக பிரிவு ஊடாக வெளியிட முடியுமா ஐயா...


ரூபா 58 மில்லியன் எவ்வாறு உரிய திட்டத்தின் குறிக்கோள் என்னக்கருவினை நிறைவேற்றியுள்ளது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் ஊடக அறிக்கையின் உண்மை தன்மை என்னவாக இருக்கும் ஐயா...

முடிந்தால் இதனையும் தெளிவு படுத்துங்கள்...

(தகவல் தகவல் உரிமைக்கான சட்டம்)
என அந்த முகப்புத்தகத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.