வெல்லாவெளியில் வாய்க்காலில் குளிக்கச்சென்றவர்களின் நிலை? –தேடுதலில் பொலிஸார்

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் வாய்க்கால் ஒன்றில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி 35ஆம் கிராமத்தில் உள்ள நவகிரி வாய்க்கால் ஒன்றில் இன்று மாலை ஆறு இளைஞர்கள் நீராடியுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த இளைஞர் நீரில் காணாமல்போனமை தொடர்பில் அங்கிருந்த நான்கு இளைஞர்களும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.