மட்டு.ஆசிரியர் கலாசாலை ஞான விநாயகர் கும்பாபிசேக தின சங்காபிசேகம்

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் ஸ்ரீஞானவிநாயகர் தேவஸ்தானத்தின் கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம் இன்று செவ்வாய்க்கிழமை(28-05) காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் உள்ள ஸ்ரீ ஞானவிநாயகர் தேவஸ்தானத்தின் கும்பாபிசேகத்தினை தொடர்ந்து வருடாந்தம் மகா சங்காபிசேகம் நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை ஆலயத்திற்கு முன்பாக சங்காபிசேக கிரியைகள் சர்வதேச சபரிமலை சாஸ்தாபீட பீடாதிபதி பிரம்ம ஸ்ரீ ஐயப்ப சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது சங்குகளுக்கும் பிரதான கும்பங்களுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று விசேட யாகமும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக விநாயகப்பெருமானுக்கு கும்பாசிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் சங்காபிசேகம் செய்யப்பட்டது.

இதன்போது விசேட பூஜைகள்,பஜனைகளும் நடைபெற்றதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த சங்காபிசேக கிரியைகளில்  மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் முதல்வர்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள்,ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.