கவிகோ வெல்லவூர் கோபால் எழுதிய வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும் 22வது நூல் வெளியீடு

 (எஸ்.நவா)

வெல்லாவெளி அருள்மிகு முத்ததுமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் அனுசரனையில் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மே 5 சனிக்கிழமை சட்டத்தரணி உள்நாட்டு இறைவரிதிணைக்கள ஆணையாளர் மு.கணேசராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலே தொன்மையும் பெருமையுமு; வாய்ந்த வெல்லாவெளி கிராமத்தில் குடிகொண்டு அருள் புரியும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறு ஆவணப்படுத்தும் முயற்சியாக நாடறிந்த எழுத்தாளரும் கவிக்கோவுமான வெல்லவூர்க் கோபால் அவர்களின் முயற்சியினால் உருவாகியுள்ள வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும்

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்  ஆர்.ராகுலநாயகி  வெல்லாவெவளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AAAA.N டயஸ் பிரதம அதிதியாகவும் முதன்மை பிரதி பெறும் அதிதியாக வீ.ரஞ்சிதமூர்த்தி சைவப்புரவலர் மட்டக்களப்பு தமிழ சங்க தலைவர் அவர்களும் வி.குணராசசேகரம் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.ம.தங்கையா ஓய்வு நிலை உதவி கல்வி பணிப்பாளர் திரு.த.விவேகானந்தம் ஓயு;வு நிலை அதிபர் திரு.பா.வரதராஜன் உதவிக்கல்வி பணிப்பாளர் கவிஞர்.தணிகசீலன் உதவி பணிப்பாளர் த.அருள்ராஜா கோடடைக்கல்வி பணிப்பாளர் வ.மேகநாதன் விரிவுரையாளர் தொழினுட்ப கல்;லூரி ஞர்.அரவிந்தன் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர்  தமிழ்ச் சங்த்தினர் ஆலய அரங்காவலர் சபையினர் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர்கள் இந்நிகழ்வுக்கு கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்

இதன் போது நூலாசிரியர் கவிக்கோ வெல்லவூர் கோபால் அவர்களுக்கு வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தினர் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து மடல் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்திக்கதும்.