இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி.கொடிய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு 41 ம் நாளில் நினைவஞ்சலி.

கொடிய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான  உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது தேவாலயங்களில் இறை ஆராதனைகளிலும், விருந்தினர் விடுதிகளிலும் ஓய்வை கழித்தும் கொண்டிருந்த உள்நாட்டு வெளிநாட்டு குழந்தைகள், சிறுவர்கள்,  பொதுமக்கள் பலர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக எதிர்வரும் 31.05.2019 வெள்ளிக்கிழமை  41ம் நாள் நினை அஞ்சலியும், அன்னதானமும் மயிலம்கரச்சை வாழ் பொதுமக்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மயிலம்கரச்சை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.