மட்டக்களப்பில் கிளேமோர் மீட்பு – விடுதலைப்புலிகளினது என தெரிவிப்பு

மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள வாவிப்பகுதியில் அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,பூம்புகார் பகுதியில் உள்ள வாவிப்பகுதியிலேயே இந்த கிளேமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் வாவிக்கரையினை தூய்மைப்படுத்தும்போது இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு சென்ற குண்டு செயலிழக்கச்செய்யும் படையினர் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கிளேமோர் குண்டு விடுதலைப்புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என படையினர் தெரிவித்தனர்.குறித்த கிளேமோர் குண்டில் எதிரியின் பக்கம் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த குண்டு படையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டது.குறித்த கிளேமோர் பாரிய சேதத்தினை ஏற்படுத்தக்கூடியது என படையினர் தெரிவித்தனர்.