மகியங்கனையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மகியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்;டக்களப்புக்கு எடுத்துவரப்பட்டுக்கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

முகியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றினை மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மகியங்கனைக்குசென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சடலங்களை விரைவில் பெறுவதற்கு உதவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.