மட்டக்களப்பு தாக்குதல்தாரி இனங்காணப்பட்டார் –மேலும் நான்கு பேர் கைது

மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்தாரி காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தற்கொலைத்தாக்குதலை நடாத்தியவருக்கு உதவியதாக  நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.