மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடந்த வருடம் (2018) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த தேசிய பாடசாலையானது சிறப்பான அடைவினை வெளிப்படுத்தியுள்ளது.
சகல பாடங்களிலும் விசேட சித்தியைப்(A) பெற்றுக்கொண்ட 9 மாணவர்களும், எட்டுச் விசேட சித்தியையும், ஒரு திறமைச் சித்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் 8 மாணவர்களுடன் 75.3நூற்றுவீத மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்பதற்கான தகுதியினைப் பெற்று தமது பாடசாலைக்கும் தமது தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஒன்பது பாடங்களிலும் சிறப்புச் சித்தியைப் பெற்ற செல்வன். ஜீ.திவ்சாந், எம்.சஜீவன், ஜே.கோசிகன், எஸ்.லிருக்ஷிகன், ஏ.சாகித்தியன், ஆர்.கிருசோபன், எஸ்.திஸ்ஸன், எல்.சர்மிலன், கே.சஞ்சை ஆகிய மாணவர்களை பாடசாலை முதல்வர் தங்கையா யசோதரன் தலைமையிலான பாடசாலைச் சமூகத்தினர் தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் பெருமை அடைகின்றனர்.