ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரிவுக்கான அலுவலகம் நேற்று(01-04) மாலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரிவிற்கான பிரதான அமைப்பாளர் கு.ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு,திருமலை பிரதான வீதியில் சின்ன ஊறணியில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 25 கர்ப்பிணிப்பெண்களுக்கு உதவிகளும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவிற்கான பிரதான அமைப்பாளர் சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அலுவலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்தில் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சி அமைப்பாளர்கள்,உறுப்பினர்கள்,முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் பொதுச்செயலாளா கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரிவிற்கான பிரதான அமைப்பாளர் கு.ஹரிதரனின் சொந்த நிதியில் இருந்து 100 மாணவர்களுக்கான உதவித்தொகை வங்கிப்புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.