அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கிளையினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு 2019.03.31 கள்ளியன்காடு கமநலசேவை அலுவலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் பிரதிதலைவர் வீ.பற்குணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக், ஆலோசனை குழு உறுப்பினர் என்.ரமணீஸ்வரன், பொருளாளர் யூ.எல்.ஜஃபர் உட்பட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சிமன்றங்கள் அடங்கலாக மத்திய அரசாங்கம், கிழக்கு மாகாண சபை என்பனவற்றில் கடமையாற்றும் ஏராளமானமுகாமைத்துவ உதவியாளர்கள்கலந்து கொண்டதுடன், அதிக எண்ணிக்கையிலான முகாமைத்துவ உதவியாளர்கள், புதிதாக அங்கத்துவம் பெற்றுசங்கத்தில் இணைந்தும் கொண்டனர்.
முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ஒரு தொழிற் சங்கம் ஏன் அவசியமாகின்றது என்ற தொனிப் பொருளில் சங்கத்தின்தலைவர் ஏ.ஜீ.முபாறக் உரையாற்றினார். முகாமைத்துவ உதவியாளர்கள் தற்போது தொழில் ரீதியாக தமது உரிமைகளையும் கௌரவத்தையும் இழந்து நிற்கின்றனர். முகாமைத்துவ உதவியாளர் சேவை உருவாக்கப்படுவதற்கு முன்பு இருந்த எழுதுனர் சேவையும், அதனுடன் இணைந்த சேவையும் மிகவும் கௌரவமாகவும்இ பல்வேறு உரிமைகள் சலுகைகளுடனும் இருந்தது. பதில் பிரதேச செயலாளர்களாக, பதில் கணக்காளர்களாகஇ பதில் ஆணையாளர்களாக கடமையாற்றிய இச்சேவையைச் சேர்ந்தவர்கள் தற்போது தமது பதவிகளுக்கு உரித்தான பொறுப்புகளைக்கூடபெற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எமது சங்கம் தமது உரிமைகளை பெற்றுக் கொள்வதில் பெரிதும்போராடி வெற்றி கண்டுள்ளது. பிரதேச சபைகளின் செயலாளர்களாக முகாமைத்து உதவியாளர் சேவையை சேர்ந்தவர்கள் அல்லாத வேறு சேவையை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளோம். அலுவலகங்களில் பிரதம முகாமைத்துவ உதவியாளர், நிதி உதவியாளர், பதவிநிலை உதவியாளர் போன்ற பதவிகளுக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சாராத வேறு சேவையைசார்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதை நிறுத்தியுள்ளோம். இடமாற்றங்களின்போது செல்வாக்குள்ளவர்கள் பலவகையான சலுகைகளை அனுபவிக்கஇ ஏனையோருக்கு அநீதி இழைக்கப்படும் கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம். கணக்காளர் வெற்றிடம் இல்லாத அலுவலகங்களில் கணக்கு வேலையை கவனிப்பதற்கென நியமிக்கப்பட்ட நியமனங்களின்போது முகாமைத்துவ உதவியாளர்கள் புறந்தள்ளப்பட்டனர். அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
இதுபோன்று இன்னும் ஏராளம் ஏராளமான முக்கிய பிரச்சினைகள் எமது சங்கத்தினால் முடிவிற்குகொண்டுவந்துள்ளோம். இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை பிராந்திய அலுவலகங்களிலும், கொழும்பு தலைமைக் காரியாலயத்திலும் அதிகமானமுறைப்பாடுகளை செய்து தீர்வுகளை பெற்றுள்ளோம். தேவையான சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்ய நாங்கள் பின்நிற்கப்போவதில்லை.
ஆயினும் கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது குறையவில்லை. திருகோணமலை நகரசபையிலும்இ இன்னும் பல அலுவலகங்களிலும் சிறுபணியாளர் சேவையைச் சேர்ந்தவர்களுக்கு முகாமைத்துவ உதவியாளர்கள் கடமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைப் பொறுப்புக்கள் வழங்கப்படக் கூடாது என பல சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்ட போதும், கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவைகள் தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் எதுவிதநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைப் பொறுப்புகள் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு வழங்கப்படாததனால், அலுவலகங்களில் முகாமைத்துவ உதவியாளர் ஆளணி எண்ணிக்கை தேவையான அளவில் உருவாக்கப்படாமல் உள்ளது.
இவைகளை கலந்துரையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவில்லை. பிரதம செயலாளர், தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனை சபையினை அமைத்திருத்தல் வேண்டும். இது பலதடவை சுட்டிக்காட்டப்பட்போதிலும் அவைகள் நடைமுறைக்கு வரவில்லை. இவைகள் தொடர்பில் தற்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைப் பொறுப்புகளை வழங்குவது தொடர்பில் நீதிமன்றம் செல்வது பற்றி ஆலோசித்து வருகின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகள் தனிஒருவரினால் செயற்படுத்த முடியாது. இதனை செயற்படுத்துவதாக இருந்தால் நாம் ஒன்றிணைந்து ஒரு முகப்பட்டு ஒரே கொள்கையில் ஒற்றுமையாக, பிரதேச மற்றும் இனவேறுபாடுகளுக்கெல்லாம் இடங்கொடுக்காமல் பயணித்தால் மாத்திரமே முடியும். எனவேதான் இச்சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைந்து எம்முடைய கைகளைப் பலப்படுத்தி நமது இலக்கை அடைய நாம் ஒவ்வொருவரும் பங்குதாராக வேண்டும். இவ்வாறுசங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் உரையாற்றினார்.
சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைவதன் அவசியத்தையும்இ சங்கத்தை பலப்படுத்துவதன் அவசியத்தையும் எதிர்காலத்தில் நாம் நிறைவேற்றவேண்டிய பொறுப்புக்கள்பற்றியும் பலரும் உரையாற்றினர் .
தொடர்ந்து மாவட்டக் கிளைச் செயலாளராக திருமதி சித்தி ஜாயிதா ஜலால்தீன், மாவட்ட இணைப்பாளராக நவநீதன், மாவட்ட ஊடச செயலாளராக உ.உதயகாந்த், மட்டக்களப்பு வலய செயலாளராக திருமதி பீ.ஜெயக்குமார், தொடர்பாடல் செயலாளர்களாக மட்டக்களப்பு வலயத்திற்கு டீ.நிரோசன், கல்குடாவலயத்திற்கு எச்.எம்.பதுர்தீன், பட்டிருப்பு வலயத்திற்கு ஜீ.புவிதரன், பிரதேச செயலகபிரிவுகளுக்கான செயலாளர்களாக, மண்முனை வடக்கு திருமதி யூ.சன்ஜீவராஜ், திருமதி எஸ்.மேகலாதேவி, மண்முனைப்பற்று ஆரயம்பதி திருமதி ரீ.சந்திரமோகன், கோரளைப்பற்று கிரான் எஸ்.எல்.ஹனீபா, காத்தனான்குடி எம்.எம்.ஏ.சாகிர், பட்டிப்பளை கே.கமலேந்திரன் ஆகியோரும் ஏகமனதாகதெரிவு செய்யப்பட்டனர்.