அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை மறுநாள் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.
நேற்று 09.04.2026 ஆம் தேதி வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்பம் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை 10.04.2026 மற்றும் நாளை 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலான பக்தர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
அனைவரையும் ஆலய தலைவர் பொன். ரமேஷ்,
செயலாளர் குமரேசன் ,பொருளாளர் யோகேந்திரன் ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.




