குண்டுத்தாக்குதல் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் -மரியாள் பேராலயம் இலக்கா?

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன.

குறித்த தாக்குதலை நடாத்த வந்தவரை தேவாலய நிர்வாகத்தினர் சந்தேகம் கொணடு வெளியில் அனுப்ப முற்பட்டபோது அவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்டவரை தேவாலய ஊழியர்கள் தேவாலயத்திற்குள் இருந்துவெளியேற்றிய நிலையில் மீண்டும் அவர் தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்ட நிலையில் அவர் ஊழியர்களுடன் வாக்குவதம் செய்துகொண்டிருக்கும்போதே குண்டை வெடிக்கச்செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை கொலையாளி மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தினை இலக்குவைத்தே வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடந்த அன்றைய தினம் காலை தேவாலயத்திற்கு முன்பாக நின்ற இளைஞர்களிடம் குறித்த தேவாலயத்தில் மாஸ் தொடர்பில் கேட்டதாகவும் அவர்கள் வழிபாடுகள் முடிந்துவிட்டது என்று கூற அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.