பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட சைவ நற்பணி மன்றத்தலைவர் சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஶ்ரீ அ.கு. லிகிதராஜக்குருக்கள் விடுக்கும் ஊடக அறிக்கை.

இலங்கை நாட்டில் பல்லின மக்கள் பலதரப்பட்ட சிரமத்தின் மத்தியில் இன மத வேறுபாடு பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றமை உலகமே அறிந்தது. 

அன்மையில் ஏற்பட்ட கிறிஸ்தவ மதஸ்த்தல  அனர்த்தங்கள் நாடளாவிய ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயமுள்ள யாருமே இத்தாக்குதலை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இத்தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த  மக்களின் ஆத்ம சாந்திக்காகவும் அவர்களின் குடும்பத்தாரின் மன ஆறுதலுக்காகவும் சமய அனுஸ்டானங்களில் ஈடுபடுமாறு வேண்டுகிறேன்.

மத ஸ்தலங்கள் பாடசாலைகள் தனியார் வகுப்பு நிறுவனங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் போக்குவரத்து நிலையங்களில் விசேட பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். 

இனிமேல் இவ்வாறான இரக்கம் இல்லாத சம்பவங்கள்  நடக்க பொதுமக்களாகிய நாம் இடமளிக்கக்கூடாது.

இச் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதோடு எமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சம்மந்தப்பட்டவர்களிடத்தில் மிகவும் தயவாக வேண்டிக்கொள்கிறேன்.