வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்படிச்சேனை உம்மாரி காட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 43 வயதான மாணிக்கப்போடி தற்பரன் என்பவரின் சடலமே இவ்வாறு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது அருந்தியதனாலே குறித்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்க கூடுமென பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.