மட்டக்களப்பு தேத்தாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய தீர்த்த உற்சவம்

 (எஸ்.நவா)

மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோட்சவம் கடந்த (10) திகதி புதன்கிழமை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10நாட்களும் மங்கள வார்த்தியங்கள் ஒலிக்க வசந்த மண்டப அலங்கார பூசைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம்வந்து சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராஜா ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.மோஹனாநந்த குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற உற்சவத்தின் இன்று இறுதி நாளான (19) வெள்ளிக்கிழமை பத்துமணியளவில் பாலாவி தீர்த்தக்கரையில் ஏராளமான அடியார்கள் புடைசூழ தீர்த்தஉற்சவம் பிரமாண்டரமான முறையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் போது திருவிழாக்காலங்களில்; அன்னதான நிகழ்வுகளும்  இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.