கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான ஒரு சரியான தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் போல் இருக்கின்றார்கள்

மயிலம்பாவெளி சிவபுரம் கிராம கிராமமக்களினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட புதுவருட  கலைகலாச்சார நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும் கெளரவ அமைச்சர் மனோகணேசன் அவர்களின் அவர்களின் கிழக்குஇமட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கணேசமூர்த்தி கோபிநாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


மக்களிடையே உரையாற்றும் ஆற்றும் போது இன்று மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான ஒரு சரியான தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் போல இருக்கின்றார்கள்.... 
கிராமத்துக்கான சிறப்பான தலைமைத்துவத்தை கிராம அபிவிருத்தி தலைவர்கள்இகோயில் தலைவர்கள்இவிளையாட்டுக்கழகத்தலைவர்கள் வழங்கி சிறப்பாக தங்களால் முடியுமானவரை உதவுகின்ற போதும் அதுக்கு கைகொடுக்க வேண்டிய அரசியல் தலைமை மக்களினால் தேர்ந்தெடுக்க பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுவதில்லை.

இனி இனிவரும் காலங்களில் கட்சிக்கு வாக்களிக்காமல் சிறந்தஇ திறமையானஇ மக்களுக்கு உதவும் நபர்களை தேர்ந்தெடுக்க வேணும்.தமிழர்களுக்கு நடக்கும் பல அநீதிகளை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
கிராம மக்கள் தங்களின் பணத்தை கொண்டு கோயில்இசிறிய அபிவிருத்தி இ இலவச கல்வி வகுப்புகள் தங்கள் மக்களுக்காக சிறப்பான தமைமைத்துவத்தின் கீழ் நாடத்துவதை பாராட்டுகின்றேன்.

அண்மைக்காலமாக அமைச்சர் மனோ கணேசன் 850 மில்லியன் செலவில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மேற்க்கொண்டு இருந்தார்..இதில் எனது வேண்டுகோளுக்கு இணங்க பல  அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண்டார்.100 மில்லியன் இக்கு மேல் அபிவிருத்திக்காக மட்டக்களப்புக்கு ஒதுக்கியிருந்தார்.

இனி இளைஞர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது மாவட்டத்தையும் மாகாணத்தையும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பாடுபட படவேணும் எனத்தெரிவித்தார்.