மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உயிர் இழந்த உறவுகளிற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளின் ஆன்ம சாந்திக்காக மட்டக்களப்பு மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.தயாபரன் தலைமையில் பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், தேசியக்கொடி அரைக்கம்பத்தில்  ஏற்றப்பட்டு மூன்று நிமிட மௌன   அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது ஆத்மார்த்தமான அஞ்சலியினையும் செலுத்தினர்.