மன்னாரில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.



சிவ பூமியான மன்னார் மாதோட்ட நன்நகரில் புனித திருத்தலமான திருக்கேதீச்சர ஆலய வீதியில் மஹா சிவராத்திரி விரத தினத்தை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட வரவேற்பு பதாதை சிலரால் உடைத்து சேதமாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மட்டக்களப்பு சைவ நற்பணி மன்ற தலைவரும்,  சர்வ மத ஒன்றிய ஏறாவூர் இணைப்பாளருமான சத்திஜோஜாத சிவாச்சாரியார் சிவஶ்ரீ அ.கு. லிகிதராஜக்குருக்கள் வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கையில் மன்னாரில் நடைபெற்ற சம்பவத்திற்கு தமது கண்டணத்தை தெரிவித்தார் .

சைவத்தமிழர்களை மாத்திரம் அல்லாது மனித நேயமுள்ள எவரையுமே இந்த சம்பவம் கடும் வேதனைக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கும்.

இன்றைய காலச் சூழலில் மத நல்லிணக்கத்திற்கான தேவைப்பாடும் , அர்ப்பணிப்பும் , விட்டுக்கொடுப்புக்களும்,  கசப்புணர்வுகளை மறத்தலும் மன்னித்தலும்  தேவை மிகுந்த ஒன்றாக உள்ளது. 

இந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் இன்னுமின்னும் குரோத மனங்களை குளிர்ச்சி படுத்துமே தவிர சாந்தப்படுத்தாது.

ஆகவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நல்லெண்ணத்தை செயலில் காட்டி இந்துக்களின்  உன்னத வழிபாட்டு நாளான சிவராத்திரியை சிறப்பாக அனுஸ்ட்டிக்க உதவுவதோடு உடைக்கப்பட்ட பதாதையினை   சீர்செய்து தவறுகளை திருத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

அவ்வாறு நிகழாது போனால்  இந்த சம்பவம் மனங்களில் மாறா வடுவாகவே இருக்கும் என்பதனையும் சம்மந்தப்பட்ட தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன் .