மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

இந்துக்கல்லூரியில் பாரிய சிரமதானம் – பழைய மாணவர்களை இணையுமாறு அழைப்பு

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் பாரிய சிரமதான நடவடிக்கையொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பில் மிகவும் பழமையான பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முதல்கட்டமாக பாடசாலையின் ஆரம்ப பிரிவு பகுதி முழுமையாக சிரமதானம் மூலம் தூய்மைக்கபடுத்தப்பட்டது.

இந்துக்கல்லூரியினை கட்டியெழுப்புவதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் பழைய மாணவ சங்கத்துடன் ஒன்றிணையவேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் பாலிப்போடி மோகனதாஸ் தெரிவித்தார்.

இந்த சிரமதான நிகழ்வில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.