சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் இன்று காலை குழியொன்று தோண்டப்பட்டபோது அங்கிருந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சத்துருக்கொண்டானில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்ட பகுதியிலேயே இந்த மனித மீட்கப்பட்டுள்ளன.

வீடு அமைக்கப்பட்டுவரும் பகுதியில் குழிவெட்டும்போது அதில் மனித எச்சங்கள் தென்பட்ட நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.குறித்த எச்சங்கள் சுமார் 25வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மனித எச்சத்தில் மண்டைப்பகுதி பிளக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்வருகின்றனர்.