கற்றல் வள நிலையத் திறப்பு விழா




(எஸ்.நவா)
     
பட்டிருப்பு கல்வி வலயத்தற்குற்பட்ட மட்/.பட்.மண்டுர் மகாவித்தியாலயத்தில் கற்றல் வளநிலைய திறப்பு விழா மண்டுர் மகாவித்தியாலய அதிபர்  செ.தம்பிப்பிள்ளை அவர்களின்; தலைமையில் (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம  அதிதியாக முன்னாள் பிரதி அமைச்சரும் பட்டிருப்புத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி; விசேட அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி சிறப்பதியாக பட்டிருப்பு கல்வி வலய உதவிப்பணிப்பாளர் எ.பாத்தீபன் மற்றும்  பிரதேச சபை உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கு மேற்பட்ட நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது இவற்றின் போரதீவுப்பற்று கல்வி கோட்டத்தின் மூன்று கற்றல் நிலையங்கள் மண்டுர் மகாவித்தியாலயம் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம் மற்றும் முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயம் என மூன்று பாடசாலைகளில் கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.