மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

கிழக்கை மீட்போம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தினம்

கிழக்கினை மீட்போம் என்னும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏற்பாடுசெய்த சர்வதேச மகளிர் தினம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை மட்டக்களப்பு விஜயா திரையரங்கு முன்பாக மாபெரும் மகளிர் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடி சந்தியை வந்தடைந்து அரசடி சந்தியில் உள்ள தேவநாயகம் மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த கிழக்கை மீட்போம் என்னும் தலைப்பிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி பாரதி கெனடி,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,சர்வதேச தொடர்பாளர் துரைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச மகளிர் தின பிரகடனம் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகரினால் வாசிக்கப்பட்டதுடன் மகளிர் தினம் தொடர்பான விசேட உரைகளும் நடைபெற்றன.