போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கலாச்சார மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மகளீர் பெண்கள் தினம் நிகழ்வுகள்


(எஸ்.நவா)


போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் “திறமையான பெண்ணொன்று அழகான உலகினைப் படைக்கிறாள் தொனிப்பொருளில்” சர்வதேச நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வானது போரதீவப்பற்று பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் மார்ச் (08)  வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் தின பேரணி சமுர்த்தி சமுதாய பெண்கள் அமைப்புக்கள் மாதர் அபிவிருத்தி சங்க அமைப்புக்கள் மற்றும் பிரதேச செயலக பெண்கள் அமைப்புக்கள் இணைந்து பிரதேச செயலகம் முன்பாக  ஆரம்பமான  பேரணி பிதான வீதி ஊடாக கலாச்சார மத்திய நிலையத்தை வந்தடைந்தது.

இப்பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டார்கள் பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம் பெண்களுக்கு மதிப்பளிப்போம் குடும்ப வன்முறையை தூண்டும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம் பெண்களுக்கு ஊதியத்தை வழங்கு என்ற பதாதைகளை தாங்கியவாறு மகளீர் தினம் பேரணி ஊர்வலம் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபர்  ச.கணேசமூர்த்தி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பெண்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் கவிதைகள் பேச்சுக்கள் கலைநிகழ்வுகள் பெண்கள் கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன்  நூறு முற்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.