பிரதாபனை உற்சாகமூட்டி வழியனுப்பிவைத்தனர் மட்டு இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி .



மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை, லயங்களில் வாழும் மக்களுக்கு தனியான சொந்தவீட்டுத்தேவை என்பன நிறைவேற்றிக்கொடுக்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தி வட மாகாணம் வவுனியாவை சேர்ந்த பிரதாபன் அவர்கள் கடந்த 10.02.2019 அன்று  துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வலம்வரும்  கவனயீர்ப்பு பயணத்தை ஆரம்பித்திருந்தார்.


நேற்று பத்தொன்பதாவது நாளில் மாலையில் மட்டக்களப்பு  நகரை வந்தடைந்த பிரதாபனை  வரவேற்று உபசரித்த மட்டு இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி அவருக்கான இராப்போசனம் மற்றும் தங்குமிடவசதிகளை வழங்கியிருந்தனர்.


அந்தவகையில் இன்று (01/03/2019) மட்டு இளைஞர் அமைப்பு , மற்றும் இலங்கை தமிழரசுகட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி இணைந்து மட்டக்களப்பு காந்திப்பூங்க முன்றலிருந்து தமது இருபதாவதுநாளில் பயணத்தை பொலனறுவை நோக்கி ஆரம்பித்த பிரதாபனின் பயணத்திற்கு உற்சாகமூட்டி வழியனுப்பி வைத்தனர்.