மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

பிரதாபனுக்கு உற்சாக வரவேற்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால்மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து தனது இருபதாவது நாள் பயணத்தை பொலனறுவை நோக்கி ஆரம்பித்த தர்மலிங்கம் பிரதாபனுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை  உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.


மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை, லயங்களில் வாழும் மக்களுக்கு தனியான சொந்தவீட்டுத்தேவை என்பன நிறைவேற்றிக்கொடுக்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தி வட மாகாணம் வவுனியாவை சேர்ந்த பிரதாபன் அவர்கள் கடந்த 10.02.2019 அன்று  துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வலம்வரும்  கவனயீர்ப்பு பயணத்தை ஆரம்பித்திருந்தார்.


அந்தவகையில் இன்று (01/03/2019) இலங்கை தமிழரசுகட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் லோ. தீபாகரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பான முறையில் தர்மலிங்கம் பிரதாபனை வரவேற்று வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.