இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தினத்தினை முன்னிட்டு வடகிழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வா ஜனனதின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தந்தை செல்வா சிலையருகில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் பிரதேசசபையின் தவிசாளர்கள்,மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி உறுப்பினர்கள்,கட்சி முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் அலுவலகத்தில் இரத்ததான முகாம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் ஆர்.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் கட்சி முக்கிஸ்தர்கள்,வாலிப முன்னணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு இரத்ததான முகாம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் இரத்த இரத்ததான நிகழவினை நடாத்தினர்.