அனைத்து முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் முக்கிய அறிவித்தல்

அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கான வருடாந்த ஒன்றுகூடல் இன்று 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கள்ளியன்காடு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலானது காலை 9.30 ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அத்தோடு  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது. மேலும் பல முக்கிய விடயங்கள் இதன் போது கலந்துரையாட வேண்டியுள்ளதால் இக் கலந்துரையாடலில் சங்கத்தில் அங்கம்வகிக்கின்ற,  அங்கத்துவம்வகிக்காத  அனைத்து திணைக்களங்களிலும் கடமையாற்றும் முகாமைத்துவ  உதவியாளர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன்,  தொடர்ந்தும் தொழிற்சங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக தொழிற்சங்கத்திற்கு மேலும் வலுச்சேர்க்க முன்வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர்.