கோட்டைக்கல்லாறில் எமனாக மாறிய கார் –ஒருவர் பலி –நான்கு பேர் படுகாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்;டைக்கல்லாறு பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று இரவு வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி அப்பகுதியில் நின்றவர்களுடன் மோதிய நிலையில் வீடு ஒன்றிலும்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த துறைநீலாவனையை சேர்ந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அப்பகுதியில் நின்ற நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.