தந்தை செல்வாவின் 121 வது பிறந்ததினமான 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
31.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தந்தை செல்வாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து கெளரவம் செலுத்துப்படுவதுடன்,
அதே நாளில் காலை 09.30 மணி முதல் பி.ப 01.00 மணிவரை நல்லையா வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையில் இரத்ததான நிகழ்வும் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர், சிரேஸ்ட உபதலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி நிருவாகத்தினர்.


