போட்டிப்பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? (கட்டுரை)


இலங்கையைப் பொறுத்தவரையில் வேலையில்லாப்பட்டதாரிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதற்கான காரணம் என்ன? என ஆராயும் போது உயர்ந்த பதவி வெற்றிடங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறையும் சில பதவிகளுக்கு மேலதிக ஆட்களும் உள்ளமையும், மேலும் இலட்சத்தில் ஒருவராக இருக்க ஆசைப்படும் பட்டதாரிகளும், 1000த்தில்,100ல் ஒருவராக இருக்க  முயற்சிக்காத பட்டதாரிகளும் மேலும் வாய்ப்புக்களை தவறவிட்டவர்களும், போதிய வழிகாட்டல் இல்லாதவர்களும், திறமையும் தகுதியும் இருந்தும் முயற்சிக்காதவர்களும் ஆக பட்டதாரிகள் காணப்படுகின்றமையுமாகும்.
ஆகில இலங்கை பல போட்டிப்பரீட்சைகள் இடம்பெறுகின்ற போதும் அதில் தோற்றுவோரின் எண்ணிக்கையும்,அதனைவிட அதில் வெற்றிபெறுவோரின் எண்ணிக்கைளும் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் சரியான வழிகாட்டல் இன்மையும் அவை குறிப்பிட்ட வயதிற்குள் திறந்த போட்டிப்பரீட்சையாகவும் காணப்படுவதாகும்.இவ்வாறு நாடளாவிய ரீதியில் காணப்படும் பரீட்சைகளாவன

இலங்கை நிர்வாக சேவைSriLanka Administrative service (SLAS)
இலங்கை வெளிநாட்டு சேவை  SriLankan Overseas Service (SLOS)
இலங்கைகல்வி நிருவாக சேவை  SriLanka Educational Administrative Service (SLEAS)
இலங்கை கணக்காளர் சேவை  SriLanka Accounting Service (SLAc.S)
இலங்கை திட்டமிடல் சேவைSriLanka Planning Service (SLPIS)
இலங்கை அதிபர் சேவைSriLanka Principal Service (SLPS)
இலங்கை எந்திரவியலாளர் சேவை(SL Eng.S)
இலங்கை விஞ்ஞானவியலாளர் சேவை – (SLScS)

மேலும்  SLAu.S, SLAgS, SLTS  என 10ற்கு மேற்ப்பட்ட சேவைகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்க்காக நடத்தப்படும் பரீட்சைகளை பினவருமாறு 2 விதமாக பிரிக்கலாம்.
1. திறந்த போட்டிப் பரீட்சை (Open Competitive Exam )
2. வரையறுத்த போட்டிப்பரீட்சை (Limited competitive Exam)
SLEASளுக்கு இதனைவிட மேலதிகமாக சேவை, மூப்பு, திறமை அடிப்படையிலான ஒரு பரீட்சையும் நடத்தப்படுகின்றது. முதற்பட்டம் பெற்ற பட்டதாரிகள் தங்கள் துறைசார்ந்த திறந்த போட்டிப்பரீட்சை ( Open Competitive Exam ) க்கு தோற்ற முடியும். ஆனால் இதற்க்கு குறிப்பிட்ட வயதெல்லை உண்டு.

உதாரணம் (SLAS )– வயதெல்லை 22 – 28 வருடங்கள்

 SLOS,  SLEAS – வயதெல்லை 22 -30 வருடங்கள்

மேலும் இப்பரிட்சைக்கு சமயகடமைகளில் ஈடுபடுவர்களுக்கு அனுமதி இல்லை என்பதுடன் இவற்றிற்காக இரண்டு தடவைகளுக்கு மேல் விண்ணப்பிக்க முடியாது.

வரையறுத்த போட்டிப்பரீட்சை எனப்படுவது குறிப்பிட்ட சில வரையறைக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக சேவை முன் அனுபவம் உள்ளவர்கள் மாத்திரம் தோற்றக்கூடிய பரீட்சையாகும். ஓவ்வொரு சேவை தொடர்பான போட்டிப்பரீட்சைக்கும் தோற்றுவதற்க்கு தேவையான தகமைகள் வேறுபடும். இதனை விட கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவானது (Provincial Public Service commission - PPSC) கீழ்க் குறிப்பிடும் பதவிகளுக்கு திறமையானதும் தகமையுள்ளவர்களையும் தெரிவு செய்வதற்காக நாடாத்திவருகின்றது.

1.         Probation Officer         நன்னடத்தை உத்தியோகத்தர்
2.         Social Service Officer  சமூகசேவை உத்தியோகத்தர்
3.         Rural Development Officer  கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
4.         Cultural Officer  கலாசார உத்தியோகத்தர்
5.         Graduate Teaching  பட்டதாரி ஆசிரியர்
6.         Development Probation Officer  நன்னடத்தை உத்தியோகத்தர்
7.         Development Officer  அபிவிருத்தி உத்தியோகத்தர்
8.         Investigation Officer – ஆய்வு உத்தியோகத்தர்
9.         Community Development Officer  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்
10.       Translator – மொழி பெயர்ப்பாளர்

இவற்றுள் கீழ் குறிப்பிடப்படும் பதவிகளுக்கான போட்டிப்பரீட்சைக்கு பின்வரும் 2 வினாப்பத்திரங்களுக்கு பரீட்சார்த்திகள் கண்டிப்பாக விடையளித்தல் வேண்டும்.

RDO                                                  
Cultural Officer
Graduate Teaching
C.D.O

1. General Aptitude / IQ
பொது உளச்சார்பு  நுண்ணறிவு
2. General Knowledge
பொதுஅறிவு

பொதுவாக போட்டிப்பரீட்சை ஒன்றிற்கு தொற்றுவதற்கு முன் கடுமையான பயிற்சி அவசியம் ஏன் எனின் அவை குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் நாம் பயிற்சி இன்றி அதனை வெற்றி கொள்வது கடினம்.

மேலும் கடந்தகால வினாப்பத்திரங்கள், நுண்ணறிவுப்புத்தகங்கள்,பொது அறிவு தேடல்கள் அவசியம் மேலும் வானொலி, தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் உலக நடப்புக்கள், செய்திகள் என்பவற்றை உடனுக்குடன் அறிய வேண்டியதுடன்,தினமும் பத்திரிகை பார்ப்பது அவசியம்

அத்துடன்பத்திரிகையில் புதுவித தகவல்களையும் மாறிவரும் தகவல்களையும் குறிப்பெடுத்துக் கொள்வதுடன் இற்றைப்படுத்துவதும் அவசியமாகும். பொதுவாக தேசிய, சர்வதேச ரீதியில் இடம்பெறும் அரசியல், பொருளாதார,சமூகவியல், விளையாட்டு ,வரலாறு, கலைகள் தொடர்பான விடயப்பரப்புக்களில் ஆழமான அறிவும் போட்டிப்பரீட்சையை எதிர்கொள்ள அவசியமாகின்றது.


மேலும் நுண்ணறிவு நுட்பங்கள், தர்க்கரீதியாக சிந்திக்கும் ஆற்றல், (Case Study )பிரச்சினையைத் தீர்க்கும் திறன், கிரகிக்கும் திறன் பிரயோகிக்கும் திறன் போன்ற புளுமின் படிமுறை ரீதியான ஆற்றலும் பரீட்சையை வெற்றி கொள்வதற்கு அவசியமாகின்றது. இதனைவிட பிரயோகப் பரீட்சையை எதிர் கொள்ளதற்கால பிரச்சினைCurrent Issues  பற்றிய அறிவு,உடனடியான ஒரு தலைப்பின் கீழ் 05 நிமிடம் Presentationமேற்க்கொள்ளும் திறன் என்பவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பரீட்சைக்கான வினா உருப்படிகளை பின்வருமாறு அமையும்.

1. அகவய வினாக்கள் -Subjective  Question
2. புறவய வினாக்கள் - Objective Question

அகவய வினாக்களில் கட்டுரை வடிவிலான (Essay type question) ம் புறவய வினாக்களின் பல்தேர்வு (MCQ) வினாக்களும்இ ஒருசொல்விடை, Fill in the blank போன்றனவும் இடம்பெறும்.

இவ்வாறு பல பரீட்சைகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் போதும்,பத்திரிகைகளில் அழைப்பு விடப்படும் போதும் குறிப்பிட்ட திகதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம். மேற்கூறிய போட்டிப் பரீட்சைகள் நடைபெறுவது கூட சில கலைப் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை. இதனைவிட அகில இலங்கை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவோருக்கு மதிக்கக் கூடிய உயர் தொழில்,கவர்ச்சிகர சம்பளம்  (SL – 1/ 2006) , வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் அரச அலுவலக வாகனப்பயன்பாடு, வெளிநாட்டுப்பயணங்கள் வெளிநாட்டு புலமைப் பரிசில்கள், Bungalow, Quarters ,சொத்து  வாகன கடன் வசதி குறைந்த வட்டியுடன், வெளிநாட்டில் குழந்தைகள் கல்வி கற்ப்பதற்க்கான வசதி மக்களிடமுள்ள மதிப்பு (Reputation) இவ்வாறு பல நல்ல வாய்ப்புக்கள் இருந்தும் எம்மில் பலர் நமக்க கிடைக்காது என்ற குறுகிய மனப்பாங்கால் விண்ணப்பிக்காமலும் மேலும் அது பற்றிய தெளிவின்மையும்,அசமந்தப் போக்காலும் தமிழ்ச் சகோதரர்கள் பலர் பல நல்ல தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்

ஆனால் இன்று பல்கலைக்களகங்களில் அது பற்றிய தெளிவூட்டல்கள் பரவலாக இடம்பெறுகின்றன.எனவே எதிர்காலத்தில் எம் சமூகத்தினர்  இவ்வாறான போட்டிப் பரீட்சைகளில் சிறப்பாக முகம் கொடுத்து சிறப்பான இடத்திற்கு வர வேண்டும்.

மோஜிதா பாலு,
விடுகை வருடம்,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.