பாம் பவுண்டேசன் நிறுவனத்தினுடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு திறந்து வைத்தல்

 (எஸ்.நவா)

வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தினுடாக வழங்கப்பட்ட குடி நீர் இணைப்பு (18) திங்கள் கிழமை வித்தியாலத்தின் அதிபர் ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் வைத்தியர் கோல்டன் பெனார்ண்டோ தற்செயலாக வருகைதந்தமை பல மடங்கு உற்சாகத்தினையும் இன்பத்தினையும் கொடுத்தது.
இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்வி அதிகாரி  ரீ.அருள்ராஜா மற்றும்  உதவி கல்விப்பணிப்பாளர்; ரீ.நடேசமூர்த்தி சிறப்பதிதிகளாகவும் பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் சத்தியன் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜெகதீபன் அதி விசேட அதிதிகளாகவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வித்தியாலயத்தின் முக்கியமான குறைபாடாகவும் நீண்டகாலத் தேவையாகவும் இருந்துவந்த குடிநீர் பிரச்சனைக்கான தீர்வு பாம் பவுண்டேசன் நிறுவனம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அனுசரணையுடன் வழங்கிவைத்த குழாய் நீர் விநியோகத்துடாக கிடைக்கப்பெற்றமை எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.