தமிழர் இல்லாத தேசமில்லை. அதே தமிழர்க்கு தனி நாடில்லை. இந்த தை பிறந்ததோடு நம்பிக்கை துளிர்விடுகிறது.





தமிழர் இல்லாத தேசமில்லை. அதே தமிழர்க்கு தனி நாடில்லை. இந்த தை பிறந்ததோடு நம்பிக்கை துளிர்விடுகிறது.
இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டுகின்ற போதுதான்  இந்த நாட்டினுடைய ஒட்டு மொத்த மக்களுக்கும் உண்மையான விடிவு கிட்டும், வாகரையில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின்   தைப்பொங்கல் விழாவில் அதிதியாக கலந்து கொண்ட கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் எ சுமந்திரன் குறிப்பிட்டார்.


பொங்கல் விழாவில் உரையாற்றி எம் எ சுமந்திரன்
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டுகின்ற போதுதான்  இந்த நாட்டினுடைய ஒட்டு மொத்த மக்களுக்கும் உண்மையான விடிவு கிட்டும், இல்லையென்றால் முழுநாட்டுக்குமே மோசமான எதிர்காலம் காத்திருக்கிறது,

ஆகையினால் தான் நாம் இந்த நாட்டு மக்களுக்கும் விசேடமாக தமிழர் அல்லாதவர்களிடத்திலும் தொடர்ச்சியாக சொல்கிறோம் எங்களை சுதந்திரமாக தலைநிமிர்ந்து வாழவிடுங்கள், சமமாக மதியுங்கள், எங்களுக்கான அரசியல் உரித்துக்களை அனுபவிக்க விடுங்கள், எம் மக்களை எம் மக்களே ஆள விடுங்கள்  அப்படிச்செய்கின்ற போது நீங்களும் சுயமாக, நிம்மதியாக, சமாதானமாக வாழமுடியும்.


ஒரு இனம் இன்னுமொரு இனத்தை அடக்கி ஆள்வதன் மூலம் அந்த தேசத்தில் சமாதானம் ஏற்படாது அந்த மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.
அடக்கு முறை என்பது குண்டுமழை பொழிந்துதான் அடக்குவது என்றில்லை ,ஜனநாயகத்தினாலும் அடக்குமுறையை பிரயேகிக்கலாம்.அது பேரினவாதம் அதனால் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படும் நசுக்கப்படும்.
இந்த நிலமையை மாற்றுவதற்க்காகத்தான் ஆட்சிமுறமையை மாற்றுவதற்கு கோருகின்றோம்.