பெரியகல்லாறில் திருக்குறள் மூலம் புதிய மாணவ சக்தியை உருவாக்கும் வேலைத்திட்டம்

திருக்குறள் மூலம் புதிய மாணவர் சக்தியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர்ஆலயம் மற்றும் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயங்களின் ஏற்பாட்டில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அறநெறி பாடசாலைகள் ஊடாக திருக்குறள் புத்தகங்கள் வழங்கி திறக்குறல் போட்டிகளை நடாத்தி மாணவர்களை அதற்குள் உள்வாங்குவதன் மூலம் சிறந்த மாணவர் சக்தியை கட்டியெழுப்பும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்ஆரம்ப நிகழ்வானது இன்று பெரியகல்லாறு ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலையில் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர்ஆலயம் மற்றும் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயங்களின் தலைவர் மா.கிருபைராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக அறநெறிப்பாடசாலைகளுக்கான இணைப்பாளர் திருமதி குமுதினி மற்றும் பெரியகல்லாறு ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலையின் அதிபர் சி.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் திருக்குறள் நூல்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன் அடுத்தகட்டமாக உதயபுரம்,கோட்டைக்கல்லாறு,ஓந்தாச்சிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள அறநெறிப்பாடசாலைகளுக்கு இந்த திருக்குறல் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அனைத்து அறநெறிப்பாடசாலைகளுக்கும் புத்தகங்கள் வழங்கிய பின்னர் மாணவர்கள் மத்தியில் திருக்குறல் போட்டி நடாத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்போதுபெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர்ஆலயம் மற்றும் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயங்களின் தலைவர் மா.கிருபைராஜா தெரிவித்தார்.